/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜாமின் கையெழுத்திட்ட பெண்ணுக்கு தண்டனை
/
ஜாமின் கையெழுத்திட்ட பெண்ணுக்கு தண்டனை
ADDED : பிப் 25, 2024 05:00 AM
தேனி, : தேனியில் விபத்து வழக்கில் குற்றவாளி தலைமறைவானதால் ஜாமீன் கையெழுத்திட்ட அல்லிநகரம் மாரீஸ்வரி என்பவருக்கு 15 நாள்சிறை அல்லது ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஸ் உத்தரவிட்டார்.
தேனி வயல்பட்டி ஆனந்தகுமார். இவரது மைத்துனர் முத்துமாயன். இருவரும் 2011ல் டூவீலரில் பங்களாமேடு பகுதியில் செல்லும் போது உத்தமபாளையம் பூக்கடை சந்து மணிவண்ணன் ஓட்டிவந்த மினிலாரி மோதியது. விபத்தில் முத்துமாயன் சம்பவ இடத்தில் பலியானார்.
தேனி போலீசார் வழக்கு பதிந்தனர்.
வழக்கு விசாரணை தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில் மணிவண்ணனுக்கு அல்லிநகரம் அம்பேத்கர் தெரு கணேசன் மனைவி மாரீஸ்வரி ஜாமின் கையெழுத்திட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த மணிவண்ணன் 2021ல் தலைமறைவானார்.
இதனால் ஜாமின் கையெழுத்திட்ட மாரீஸ்வரிக்கு 15 நாள் சிறை அல்லது ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஸ் உத்தரவிட்டார்.