/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பார்வர்டு பிளாக் கட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு; பிளக்ஸ் பேனர்கள் கிழிப்பு 32 பேர் கைது

ADDED : மார் 11, 2024 07:02 AM
தேனி: தேனியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி கூட்டம் துவங்குவதற்கு அதே கட்சியை சேர்ந்த மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடக்க இருந்த இடத்திற்கு அருகே இருந்த பிளாக்ஸ் பேனர்களை கிழித்தனர். போலீசாருடன் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனியில் பார்வர்டு பிளாக் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் பங்கேற்கும் லோக்சபா தொகுதி ஆலோசனை கூட்டம் நடக்க இருந்தது. கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலாளர் முருகன் தலைமையிலான நிர்வாகிகள் செய்து வந்தனர். இந்நிலையில் கூட்டம் துவங்குவதற்கு முன் மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம் நடக்க இருந்த மண்டபத்திற்கு வந்தனர். வந்தவர்கள் கூட்டம் நடக்க கூடாது கதிரவனின் மாநில செயலாளர் பொறுப்பில் இல்லை, கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளரான எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி கூட்டரங்கில் அமர்ந்தனர்.
அவர்களுடன் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கூட்டம் கலைந்து செல்லமால் இருந்தனர். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கதிரவன் பங்கேற்ற கூட்டம் நடந்தது.