/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அடிக்கடி பழுதாகும் ரயில்வே ஸ்டேஷன் தானியங்கி 'டிக்கெட்' இயந்திரம்
/
அடிக்கடி பழுதாகும் ரயில்வே ஸ்டேஷன் தானியங்கி 'டிக்கெட்' இயந்திரம்
அடிக்கடி பழுதாகும் ரயில்வே ஸ்டேஷன் தானியங்கி 'டிக்கெட்' இயந்திரம்
அடிக்கடி பழுதாகும் ரயில்வே ஸ்டேஷன் தானியங்கி 'டிக்கெட்' இயந்திரம்
ADDED : மே 20, 2025 01:28 AM

தேனி: தேனி ரயில்வே ஸ்டேஷனில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் அடிக்கடி பழுதாவதால் பயணிகள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர்.
இந்த ரயில்வே ஸ்டேஷனில் தினமும் காலையில் மதுரையில் இருந்து போடிக்கும், மறு மார்க்கத்தில் மாலையிலும் ரயில் இயங்குகிறது. இரு ஆண்டுகளாக வாரத்திற்கு மூன்று நாட்கள் போடி சென்னை ரயில் இருமார்க்கத்திலும் இயங்குகின்றன.
தேனி ரயில்வே ஸ்டேஷன் மாவட்ட தலைநகரில் அமைந்துள்ளதால் மாலையில் மதுரை செல்லும் பயணிகள் ரயிலை பயணிகள் பலர் பயன்படுத்துகின்றனர். சென்னை செல்லும் அதிவிரைவு ரயிலில் அதிகளவில் பயணிக்கின்றனர். பயணிகள் வசதிக்காக தேனி ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுண்டர் அருகே தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் அமைந்துள்ளது.
பயணிகள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி, ஆன்லைன் செயலிகளில் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த இயந்திரம் அடிக்கடி பழுதாகிறது. இதனால் டிக்கெட் வழங்கும் இடத்தில் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில், நிற்கும் நிலை உள்ளது. இந்த இயந்திரத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'கோச் டிஸ்பிளே' அவசியம்
சோமசுந்தரம், ஓய்வு பெற்ற மின்வாரிய செயற்பொறியாளர், தேனி:
''அதிவிரைவு ரயிலில் எந்த பெட்டிகள் எங்கு நிற்கும் என பலருக்கும் தெரியாத நிலை உள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால் பெட்டிகள் பற்றி அறிந்து கொள்ள பிளாட்பாரத்தில் 'கோச் டிஸ்பிளே' வைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'', என்றார்.