/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணையில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு
/
முல்லைப் பெரியாறு அணையில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் மழை: நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஆக 31, 2025 06:58 AM
கூடலுார்: கேரள மாநிலம் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பெய்த மழையால் நீர்வரத்து 1024 கன அடியாக அதிகரித்தது.
கேரளாவில் மே 23 துவங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது குறையத் துவங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் அவ்வப்போது மழை பெய்வதும், பின் குறைவதுமாக உள்ளது.
கடந்த இரு நாட்களாக நீர் பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்ப் பிடிப்பு பகுதியான பெரியாறில் 21.6 மி.மீ., தேக்கடியில் 6 மி.மீ., மழை பதிவானது.
இதனால் இரு நாட்களுக்கு முன் 337 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 1024 கன அடியாக அதிகரித்தது.
தமிழகப்பகுதிக்கு குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்காக 1000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 5784 மில்லியன் கன அடியாகும். அணையின் நீர்மட்டம் 134.65 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி).
நேற்று பகல் முழுவதும் அவ்வப்போது நீர்ப்பிடிப்பில் மழை பெய்தது. இதனால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தமிழகப்பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 90 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

