ADDED : அக் 25, 2024 05:53 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி செல்வ விநாயகர்நகர் முதல் தெருவில் வடிகால் வசதி இருந்தும் தெரு பள்ளமாக இருப்பதால் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது.
ஊராட்சியின் விரிவாக்க பகுதியாக உள்ள இப்பகுதியில் சமீபத்தில் பல லட்சம் செலவில் வடிகால் அமைக்கப்பட்டது. வடிகாலின் கழிவு நீர் வைகை ரோட்டில் உள்ள மெயின் சாக்கடையில் சேரும்படி கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்டுள்ள வடிகாலை விட தெரு பள்ளமாக அமைந்துள்ளதால் அப்பகுதியில் சேரும் மழை நீர் வடிந்து செல்லாமல் தெருவில் தேங்குகிறது.
பள்ளமான இடங்களில் தேங்கும் நீரை குழந்தைகள், வயதானவர்கள் கடந்த செல்ல முடியவில்லை. தெருவில் வரும் வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பள்ளமான தெருவை உயர்த்தவும், மழைநீர் தேங்காமல் வடிந்து செல்லவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இப்போது மக்கள் வலியுறுத்துகின்றனர்.