UPDATED : நவ 21, 2026 06:44 PM
ADDED : நவ 21, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், பள்ளி, கல்லுாரி, வணிக நிறுவனங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பழுதடைந்த, சீரமைக்க வேண்டிய மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை சரிசெய்ய விரிவாக செயல் திட்டத்தை தயாரித்து சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் சிவ கிருஷ்ண மூர்த்தி அறிவுறுத்தினார். இதில் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் துஷார் ஸ்ரீஹர் ஷிண்டே, நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பங்கேற்றனர்.
