தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/சபரிமலை வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்ல நடவடிக்கை தேவை

சபரிமலை வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்ல நடவடிக்கை தேவை

சபரிமலை வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்ல நடவடிக்கை தேவை


UPDATED : நவ 21, 2026 06:44 PM

ADDED : நவ 21, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 06:44 PM ADDED : நவ 21, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்: சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேகத்தை குறைத்து செல்ல போலீசார் அறிவுறுத்த வேண்டும்.

சபரிமலைக்கு செல்லும் வாகனங்கள் இரவு பகல் பாராமல் சென்று வருகிறது. வெளி மாநிலங்கள் இருந்து வருபவர்கள் உச்சபட்ச வேகத்தில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். ஒரு வழிப்பாதை டிச. 20 ல் தான் அமலாகிறது. கூட்டத்தை தவிர்ப்பதற்காக சபரிமலைக்கு இப்போதே செல்ல துவங்கி விட்டனர்.

எனவே போலீசார் ஆங்காங்கே சபரிமலைக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி, வேகத்தை குறைத்து செல்ல அறிவுறுத்த வேண்டும்.

குறிப்பாக வெளி மாநில வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு ஆலோசனை கூற வேண்டும். இரவில் பைபாஸ் சந்திப்புக்களில் விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி உள்ளது. எனவே பைபாஸ் சந்திப்புக்களில் உயர் கோபுர விளக்குகள் எரிவதை நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

தனியார் பஸ் டிரைவர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும். அரசு போக்குவரத்து கழக டிரைவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி மன அழுத்தத்துடன் வாகனங்களை செலுத்தாமல் இருக்க அறிவுரை வழங்க வேண்டும். விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ள போலீசார் முன்வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us