தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ரேஷன் அரிசி கடத்தல்தடுப்பு பணி தீவிரம்

ரேஷன் அரிசி கடத்தல்தடுப்பு பணி தீவிரம்

ரேஷன் அரிசி கடத்தல்தடுப்பு பணி தீவிரம்


UPDATED : அக் 22, 2026 04:41 PM

ADDED : அக் 22, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 04:41 PM ADDED : அக் 22, 2026 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா, வேறு பயன்பாட்டிற்கு கடத்தப்படுகிறதா என தீவிர கண்காணிப்பு செய்ய வழங்கல் பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மாநில எல்லைகள், கம்பம், போடி, கூடலுார் பஸ் ஸ்டாண்டுகள், மாவட்டத்தில் செயல்படும் அரவை ஆலைகளில் வழங்கல் பிரிவு, வருவாய்த்துறையினர் ஆய்வுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அரிசி, பருப்பு பறிமுதல்:



அதிகாரிகள் கூறியதாவது:கடந்த வாரம் கம்பத்தில் பஸ்சில் கடத்த முயன்ற 200 கிலோ ரேஷன் அரிசி, பெரியகுளத்தில் அரவை மில்லில் வைத்திருந்த 180 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த மில் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ரேஷன் பருப்பு பயன்பாட்டிற்கு வைத்திருந்த ஒரு ஓட்டலில் இருந்து பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட, மாநில எல்லைகள் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us