/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன்கடை விற்பனையாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு
/
ரேஷன்கடை விற்பனையாளர் தேர்வு முடிவுகள் வெளியீடு
ADDED : ஆக 19, 2025 12:43 AM
தேனி; தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் நடத்தப்பட்ட ரேஷன்கடை விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக இருந்த விற்பனையாளர் 41, கட்டுநர் 7 பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்தது.
தேர்வு நடத்தப்பட்ட பின் 7 மாதங்களாக முடிவுகள் வெளியிடப் படாமல் இருந்தது.
இந்நிலையில் பணி யிடங்கள் கூடுதல் செய்து 51 விற்பனையாளர்கள், 8 கட்டுநர் பணிக்கு தேர்வானவர் விபரங்களை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த சில மாதங்களில் ஓய்வு பெற்றவர்களின் பணியிடங்களுக்கும் சேர்த்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர்.
இதனால் அறிவிப்பு செய்ததை விட கூடுதல் பணியிடங்களுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது,' என்றார்.

