UPDATED : அக் 12, 2026 07:11 PM
ADDED : அக் 12, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
தேனி: கால்நடை துறை நோய் தடுப்பு பிரிவு அதிகாரி பாஸ்கரன் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள குதிரைகளின் எண்ணிக்கை, உடல்நிலையை கண்காணிக்க அவற்றை விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்வது கட்டாயம்.
குதிரைகளை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதுபற்றி குதிரை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு செய்யப்படுகிறது. குதிரையின் புகைப்படங்கள், அதன் உரிமையாளர், வளர்ப்பவர் முகவரி உள்ளிட்ட விபரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். அருகில் உள்ள கால்நடை துறை அலுவலகத்திற்கு சென்று தகவல் பெறலாம். தற்போது மாவட்டத்தில் 70 முதல் 80 குதிரைகள் உள்ளன. குரங்கனி, சோத்துப்பாறை, வடகரை பகுதிகளில் அதிகம் குதிரைகள் வளர்க்கப்படுகிறது என்றார்.
