/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாயிகள் அடையாள அட்டை பெற ஜூலை 31க்குள் பதிவு செய்யுங்கள்; மாவட்டத்தில் 3.53 லட்சம் பேர் பதிவு செய்ய வலியுறுத்தல்

ADDED : ஜூலை 12, 2025 03:58 AM

விவசாயிகளுக்கு தேசிய அளவில் புதிய தனித்துவ அங்கீகார அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. வரும் காலங்களில் இந்த தனித்துவ அடையாள அட்டை இருந்தால் தான் விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் மேம்பாட்டு திட்டங்கள், மானியம், கடன் திட்டங்கள், பிரதமரின் கவுரவ உதவித்தொகை திட்டம் உள்ளிட்டவற்றில் பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி வேளாண் துறை அதிகாரி கூறுகையில், மாவட்டத்தில் பிரதமர் கவுரவ உதவித்தொகை திட்டத்தில் தற்போது 28 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றன. விவசாய நிலங்களாக 3.93 லட்சம் உட்பிரிவு செய்யப்பட்ட பட்டாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவசாய நிலங்களை பயன்படுத்தும் நில உரிமையாளர்கள் பதிவு செய்து அங்கீகார அடையாள அட்டை பெற அறிவுறுத்தி வருகிறோம். இந்த அட்டை பெற ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த அட்டை இல்லை எனில், அரசு திட்டங்களில் பயன்பெற முடியாத நிலை ஏற்படலாம்.
மாவட்டத்தில் இந்த அட்டை பெறுவதற்காக சுமார் 38,352 உட்பிரிவு செய்யப்பட்ட பட்டாக்கள் வைத்துள்ள நில உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இன்னும் 3.53 லட்சம் பட்டா வைத்துள்ளவர்கள் பதிவு செய்ய வேண்டும். ஒருவருக்கு மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் நிலம் இருந்தாலும், வெவ்வேறு மாவட்டத்தில் நிலம் இருந்தாலும் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலை, வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் பதிவு செய்யலாம். அல்லது மாதந்தோறும் 2, 4 வது வெள்ளிகிழமைகளில் வேளாண்துறை சார்பில் நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவு செய்யலாம். அதே போல் பட்டாக்கள் தங்கள் தந்தை பெயரில் இருந்தால் பதிவு செய்ய இயலும். ஆனால், தாத்தா உள்ளிட்ட மூதாதையர்களின் பெயர்களில் இருந்தால் பதிவு செய்ய முடியாது. எனவே பட்டா பெயர் மாற்றம் செய்து பதிவு செய்ய வேண்டும். இந்த அடையாள அட்டை பெறுவது தொடர்பான மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலை, வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.