ADDED : மே 16, 2025 04:13 AM

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் உயர்நீதிமன்றம் உத்தரவில் அரசியல் கட்சியினர், ஜாதி அமைப்பு கொடிகம்பங்களும் அகற்றும் பணி நடக்கிறது.
மாவட்ட, மாநில, தேசிய நெடுஞ்சாலையில் இடையூறாக உள்ள அரசியல் கட்சியினர் கொடி கம்பங்களை அகற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரியகுளம் நகராட்சி கமிஷனர் தமிஹா சுல்தானா உத்தரவில் தென்கரை, வடகரை பகுதியில் அரசியல் கட்சியினர், ஜாதி அமைப்புகள் 61 கொடி கம்பம் உள்ளதாக கணக்கிடப்பட்டு அகற்றும் பணி துவங்கியது. நகரமைப்பு ஆய்வாளர் வீரணன் மேற்பார்வையில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை அருகே 10 க்கும் அதிகமான அரசியல் கட்சியினர் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டது. அரசு போக்குவரத்து கழக டெப்போ வளாகத்தில் 8 கொடி கம்பங்கள், அதன் எதிர்ப்புறம் கொடி கம்பத்துடன், சிமென்ட் பீடம் ஆகியவை மண் அள்ளும் வாகனம் இடித்து அகற்றப்பட்டது. வடகரை பகுதியில் 25 க்கும் அதிகமான கொடி கம்பங்கள் அகற்றப்பட்டது. இன்று தென்கரை பகுதியில் அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என நகரமைப்பு ஆய்வாளர் வீரணன் தெரிவித்தார்.
பெரியகுளம்-தேனி ரோடு டி.கள்ளிப்பட்டி பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் கொடி கம்பம், சிமென்ட் பீடங்களை இடித்து அகற்றினர்.-