/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துணை மின்நிலையங்களில் பவர் டிரான்ஸ்பார்மர்கள் சீரமைப்பு; இடையூறு இல்லாத மின் வினியோகத்திற்கு ஏற்பாடு
/
துணை மின்நிலையங்களில் பவர் டிரான்ஸ்பார்மர்கள் சீரமைப்பு; இடையூறு இல்லாத மின் வினியோகத்திற்கு ஏற்பாடு
துணை மின்நிலையங்களில் பவர் டிரான்ஸ்பார்மர்கள் சீரமைப்பு; இடையூறு இல்லாத மின் வினியோகத்திற்கு ஏற்பாடு
துணை மின்நிலையங்களில் பவர் டிரான்ஸ்பார்மர்கள் சீரமைப்பு; இடையூறு இல்லாத மின் வினியோகத்திற்கு ஏற்பாடு
ADDED : பிப் 03, 2024 04:22 AM
கம்பம் : மாவட்டம் முழுவதும் துணை மின் நிலையங்களில் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர்கள், பேட்டரிகள் சீரமைக்கும் பணிகள் துவங்கி உள்ளது. இதனால் இடையூறு இல்லாத மின் வினியோகம் கிடைக்கும்.
தேனி மாவட்டத்தில்15 க்கும் மேற்பட்ட ஊர்களில் துணை மின் நிலையங்கள் உள்ளன. தற்போது உள்ள துணை மின் நிலையங்களில் வண்ணத்திபாறை, உத்தமபாளையம், ராசிங்காபுரம், காமாட்சிபுரம், மதுராபுரி, ஆண்டிபட்டி, கம்பம் உள்ளிட்ட பல துணை மின் நிலையங்கள் மிகவும் பழமையானவை.
மின் பாதையில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் வோல்ட் மின்சாரம் துணை மின் நிலையத்தில் உள்ள பவர் டிரான்ஸ்பார்மருக்கு வரும். பவர் டிரான்ஸ்பார்மர் அதை 22 ஆயிரம் கிலோ வோல்ட்டாக மாற்றி நகரில் உள்ள டிரான்ஸ்பார்மர்களுக்கு அனுப்பும். டிரான்ஸ்பார்மர்களில் இருந்து வீடுகளுக்கு 230 வோல்ட்டாக குறைத்து வழங்கும்.
இதில் மாதந்தோறும் ஒரு நாள் துணை மின் நிலைய சப்ளை செய்யும் ஊர்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆனால் துணை மின் நிலையத்திற்குள் பராமரிப்பு பணிகள் மேலோட்டமாக நடைபெறும். அதிகமாக மேற்கொள்வதில்லை.
பழமையான துணை மின் நிலையங்களில் பிரேக்கர்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். மின்வாரியம் தற்போது அதற்கான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் பிரேக்கர்கள் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் துணை மின் நிலையத்தின் இதயமாக கருதப்படும் பேட்டரி அறையில் உள்ள 25 பேட்டரிகள் என்ன நிலையில் உள்ளது என்பதை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அதே போல பவர் டிரான்ஸ்பார்மர்களையும் சரிபார்க்க வேண்டும்.
இது குறித்து மின்வாரிய வட்டாரங்களில் விசாரித்த போது, ''தற்போது உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் பிரேக்கர்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து துணை மின்நிலையங்களில் பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை சரிபார்க்கும் பணிகள்மேற்கொள்ளப்படும்'' என்றனர்.

