/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியிலிருந்து சத்திரப்பட்டிக்கு டவுன் பஸ் இயக்க கோரிக்கை
/
தேனியிலிருந்து சத்திரப்பட்டிக்கு டவுன் பஸ் இயக்க கோரிக்கை
தேனியிலிருந்து சத்திரப்பட்டிக்கு டவுன் பஸ் இயக்க கோரிக்கை
தேனியிலிருந்து சத்திரப்பட்டிக்கு டவுன் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : ஆக 29, 2025 03:36 AM
தேனி: ''தேனியில் இருந்து சத்திரப்பட்டிக்கு இயங்கும் அரசு டவுன் பஸ்களின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.'' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீரபாண்டி பேரூராட்சி சத்திரப்பட்டியில் ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவ்வூரில் இருந்து தேனி செல்லவும், வீரபாண்டி செல்லவும் அரசு பஸ்வசதி இல்லை. 10 கி.மீ., சுற்றி தேனிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பள்ளிக் கல்லுாரி செல்லும் மாணவர்கள், பொது மக்கள் சிரமப்படுகின்றனர். அரசு டவுன் பஸ் வரும் நேரம் பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் அரசு டவுன் பஸ் காலை பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, வயல்பட்டி வழியாக சத்திரப்பட்டிக்கு காலை 8:00 மணிக்கு வந்து தேனிக்கு செல்ல வேண்டும். அதேபோல் மாலை 5:30 மணிக்கு தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து அரண்மனைப்புதுார், சத்திரப்பட்டி, வயல்பட்டி வழியாக வீரபாண்டி சென்று பின் தேனி செல்லவும், இரவு 8:00 மணிக்கு தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து சத்திரபட்டி வழியாக செல்ல நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதனால் காலையில் வேலைக்கு செல்பவர்கள்,பள்ளிக் கல்லுாரி மாணவ, மாணவிகள் பயன் பெறுவர் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

