/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மழை பெய்தால் குளம் போல் தேங்கும் கழிவு நீர் தேனி சிவராம் நகர் குடியிருப்போர் அவதி
/
மழை பெய்தால் குளம் போல் தேங்கும் கழிவு நீர் தேனி சிவராம் நகர் குடியிருப்போர் அவதி
மழை பெய்தால் குளம் போல் தேங்கும் கழிவு நீர் தேனி சிவராம் நகர் குடியிருப்போர் அவதி
மழை பெய்தால் குளம் போல் தேங்கும் கழிவு நீர் தேனி சிவராம் நகர் குடியிருப்போர் அவதி
ADDED : அக் 16, 2024 05:14 AM

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட சிவராம் நகர் 3வது குறுக்குத்தெருவில் மழைபெய்தால் தெருவின் நுழைவு பகுதி முழுவதும் சாக்கடை நீர் குளம் போல் தேங்குவதால் குடியிருப்போர் குழந்தைகளுடன் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
தேனி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 14வது வார்டில் மிராண்டா லைன் 3,4,5,6, சிவராம் நகர், சிவராம் நகர் 3,4,5வது குறுக்குத்தெரு என மொத்தம் 20 தெருக்கள் உள்ளன.
இதில் சிவராம் நகர் 3வது குறுக்குத்தெருவில் 40 வீடுகளில் 200க்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் தெருநாய் தொல்லை, மழைகாலத்தில் நோய் பரப்பும் தொழிற்சாலை போல் துார்வாராத சாக்கடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகுகின்றனர்.
இது குறித்து தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதிக்காக, அப்பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி, தெய்வானை, சந்திரா, போதுமணி, ராணி கூறியதாவது:
மண்மூடிய தரைப்பாலம்
சிவராம் நகர் மூன்றாவது குறுக்கு தெருவில் சாக்கடை துார்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. சில இடங்களில் சாக்கடை இருப்பதே தெரியாத அளவிற்கு மண் மேவியுள்ளது. தெருவின் மேற்கு நுழைவு பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் கீழ் பகுதியில் மண் நிரம்பியுள்ளதால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.இதனால் மழைகாலத்தில் சாக்கடையில் கழிவுநீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் நடந்துதான் வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. தேங்கும் கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி மக்கள் கொசுக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இரவில் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. தெருவில் பல இடங்களில் திரியும் எலிகள் வீடுகளில் பெரும் தொந்தரவாக உள்ளன.
பைக் சாகச இளைஞர்களால் விபத்து
சமீப காலத்தில் இரவில் சந்தேக நபர்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. வீடுகளில் இரவில் அலைபேசி திருட்டு சம்பவங்களும் நடந்தது. மாலையில் சில இளைஞர்கள் டூவீலர் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், குழந்தைகளை அழைத்து வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாக்கடையை துார்வார நகராட்சியில் கூறினால் கண்துடைப்பாக மட்டும் சாக்கடையை துார்வாருகின்றனர். அதிலிருந்து எடுக்கப்படும் மணல் உள்ளிட்டவற்றை சாக்கடை அருகிலேயே கொட்டி செல்கின்றனர். சில நாட்களில் அவை மீ்ண்டும் சாக்கடையில் விழுகிறது. பேவர் பிளாக் கற்கள் பதித்த ரோட்டினை சீரமைக்க வேண்டும். மேடு பள்ளமாக உள்ளதால் பலர் தடுமாறி விழுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.