/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வலியுறுத்தல் மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்

ADDED : பிப் 01, 2024 05:13 AM
போட : ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் அரசு சம்பளம் வழங்க வேண்டும்,' என ஊராட்சி செயலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்ட ஊராட்சி செயலர்கள் சங்க செயற்குழு கூட்டம் போடி காமராஜபுரம் ஊராட்சியில் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். செயலாளர் வேல்முருகன், பொருளாளர் வீரபத்திரன், ஒருங்கிணைப்பாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்கவும், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்களுக்கு பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் கருவூலம் மூலம் வழங்கவும், 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு சிறப்பு காலமுறை வரை ஊதியம் வழங்கவும், பணிக்கொடை ரூ.ஒரு லட்சம், ஓய்வூதியம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், தூய்மை காவலர்களுக்கு மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் வழங்க அரசு முன்வர வேண்டும். இதற்காக பிப்., கடைசியில் மாநில மாநாடு நடத்தவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.