/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓய்வு டி.எஸ்.பி.,தோப்பில் ஆடுகள் திருட்டு
/
ஓய்வு டி.எஸ்.பி.,தோப்பில் ஆடுகள் திருட்டு
ADDED : ஜன 18, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பூதிப்புரம் மூக்க மூப்பர் தெரு காந்தசொரூபன் 69. இவர் ஓய்வு டி.எஸ்.பி., சன்னாசியப்பன் கோயில் அருகே பண்ணை வீட்டுடன் கூடிய தோப்பு உள்ளது. அங்கு ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். ஜன.10ல் மாலை 6:00 மணிக்கு ஆடு, மாடுகளை கொட்டத்தில் கட்டிவைத்துவிட்டு காந்தசொரூபனும், பணியாளர் மணிகண்டனும்ஊருக்குள் இருக்கும் வீட்டிற்கு வந்து விட்டனர்.
மறுநாள் காலை சென்ற போது ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள சி.சி.டி.வி., கேமரா, ஒயர், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செம்மறிஆடுகள் திருடு போனது தெரிந்தது.காந்தசொரூபன் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கிறார்.