/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்னமனுாரில் நெல் அறுவடை துவக்கம்
/
சின்னமனுாரில் நெல் அறுவடை துவக்கம்
ADDED : அக் 17, 2024 06:22 AM

சின்னமனுார்: சின்னமனுார் வட்டாரத்தில் நெல் அறுவடை துவங்கி உள்ளதால் நல்ல மகசூல் கிடைத்திருப்பதாகவும், தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்வது தீவிரமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த வட்டாரத்தில் சின்னமனுார், சீலையம்பட்டி, மார்க்கையன் கோட்டை குச்சனுார், கருங்கட்டான் குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் வரை நெல் சாகுபடியாகி உள்ளது.
தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள முதல் - போக நெல் அறுவடை நேற்று முதல் மார்க்கையக்கோட்டை, குச்சனுார் பகுதியில் துவங்கியது.
சாகுபடி செய்யப்பட்டு உள்ள முதல் போக அறுவடை வழக்கம் போல மார்க்கையன் கோட்டை வட்டாரத்தில் நேற்று துவங்கியது.
இந்த முறையும் வேளாண் துறை வழங்கிய ஆர்.என்.ஆர்., ரகம் நல்ல மகசூல் கிடைத்துள்ளதாக வேளாண் துறை அறிவித்துள்ளது. அறுவடை பணிகளை ஆய்வு செய்த சின்னமனுார் வேளாண் உதவி இயக்குனர் பாண்டி கூறுகையில், 'நடவுப் பணிகள் முன்கூட்டியே செய்வதால் ஆண்டுதோறும் அறுவடையும் இங்கு முன்கூட்டியே துவங்கும், மற்ற பகுதிகளில் இன்னமும் சில வாரங்கள் ஆகும். தற்போது மார்க்கையன் கோட்டையில் ஏக்கருக்கு 2-5 முதல் 3 டன் வரை கிடைத்துள்ளது.
இது நல்ல மகசூலாகும். கடந்தாண்டை தொடர்ந்து இந்தாண்டும் வேளாண் துறை வழங்கிய ரகம் நல்ல மகசூலை தந்துள்ளது.', என்றார்.
அறுவடையாகும் நெல் மூடைகளை தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்ய குவிந்து வருகின்றனர்.
வழக்கம் போல இந்தாண்டும் -நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மெத்தனப் போக்கில் உள்ளனர் என்று விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.