/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் மழைநீர் வடிகால் பள்ளத்தால் விபத்து அபாயம்
/
தேனியில் மழைநீர் வடிகால் பள்ளத்தால் விபத்து அபாயம்
தேனியில் மழைநீர் வடிகால் பள்ளத்தால் விபத்து அபாயம்
தேனியில் மழைநீர் வடிகால் பள்ளத்தால் விபத்து அபாயம்
ADDED : அக் 19, 2024 11:48 PM

தேனி : தேனி ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் அமைக்கும் பணி நடந்தது. அப்பகுதியில் இரவில் வெளிச்சமின்றி உள்ளதால் பள்ளத்தால் விபத்து அபாயம் எழுந்துள்ளது.
தேனி - மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி இரு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டன.
சிப்காட் பகுதியில் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் இரவில் போதிய வெளிச்சம் இல்லை. மேம்பால பணிகள் நடக்கும் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க சர்வீஸ் ரோடு அருகே நெடுஞ்சாலைத்துறையினரால் வடிகால் அமைக்கும் பணி நேற்று நடந்தது.
இப் பகுதியில் இரவில் வெளிச்சம் இல்லாததல் வாகனங்கள், டூவீலர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.இது பற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வடிகால் தோண்டிய பகுதியில் 'பேரிகார்டுகள்' வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்', என்றனர்.