ADDED : அக் 25, 2024 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர் : சின்னமனூர் - ஓடைப்பட்டி ரோடு மழைநீரால் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது.
சின்னமனூர் நகரில் ஓடைப்பட்டி ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடுகள் போக்குவரத்து நெரிசல் அதிகம். ஒடைப்பட்டி ரோடு வழியாக மேகமலை மலை கிராமங்களுக்கும், ஓடைப்பட்டியை சுற்றியுள்ள 20 கிராமங்களுக்கும் பொதுமங்கள் டூ வீலர்கள், கார்கள், பஸ்கள் மூலம் செல்கின்றனர். காலை முதல் மாலை வரை ரோடு போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும்.
இந்நிலையில் சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நடுத்தெரு அருகில் ரோட்டில் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. ரோடு திரும்பும் இடத்தில் பாதி ரோடே காணவில்லை.
நெடுஞ்சாலைத் துறையினர் இந்த ரோட்டை விரைந்து பராமரிக்க முன் வர வேண்டும்.