/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி
/
ஆறு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி
ADDED : ஜன 05, 2025 06:45 AM

போடி : போடி அருகே பத்திரகாளிபுரம் மெயின் ரோட்டில் இருந்து பொட்டல்களத்திற்கு ரோடு அமைக்கும் பணி துவங்கி 6 ஆண்டுகளாக முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பத்திரகாளிபுரம் மெயின் ரோட்டில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் பொட்டல்களம் இணைப்பு பாதை அமைந்துள்ளது. இப்பகுதியில் பருத்தி, மக்காச்சோளம், தென்னை விவசாயம் அதிகளவில் நடந்து வருகிறது. விளை பொருட்களை கொண்டு வர ரோடு வசதி இன்றி சிரமம் அடைந்தனர். விவசாயிகளின் சிரமங்களை தவிர்க்க பத்திரகாளிபுரம் மெயின் ரோட்டில் இருந்து பொட்டல்களம் இணைப்பு பாதை வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய திட்டத்தின் கீழ் ரூ.12.70 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கும் பணி துவங்கப் பட்டன. கற்கள் கொட்டி மேவி 6 ஆண்டுகள் ஆகியும் பணி கிடப்பில் உள்ளன. மழை, மண் அரிப்பால் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக ரோடு மாறியுள்ளது. இதனால் விவசாயிகள் டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கூட விளை பொருட்களை கொண்டு வர முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். கிடப்பில் போடப்பட்ட ரோடு பணியை விரைந்து முடிக்க போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.