/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெளியூர் மருத்துவமனைக்கு சென்றவர் வீட்டில் திருட்டு
/
வெளியூர் மருத்துவமனைக்கு சென்றவர் வீட்டில் திருட்டு
வெளியூர் மருத்துவமனைக்கு சென்றவர் வீட்டில் திருட்டு
வெளியூர் மருத்துவமனைக்கு சென்றவர் வீட்டில் திருட்டு
ADDED : பிப் 02, 2025 04:29 AM
பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ஆசிரியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ ராஜப்பா 60. ஜன.30ல் உடல்நிலை சரியில்லாததால் கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஜன.31ல் இளங்கோ ராஜாப்பா வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டிருந்தது. இதனை அருகே குடியிருக்கும் இளங்கோ ராஜப்பாவின் அண்ணன் ஜெபக்குமார் 63. பார்வையிட்டு, தம்பி மனைவிக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
வந்து பார்த்த போது வீட்டிலிருந்த தலா 2 கிராம் எடையுள்ள இரு தங்க காசுகள், ரூ.40 ஆயிரம், அலைபேசி உட்பட ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது.
ஜெபக்குமார் புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-