/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பமெட்டு ரோட்டில் விபத்தை தடுக்க 'ரோலர் கிராஸ் பேரியர்'
/
கம்பமெட்டு ரோட்டில் விபத்தை தடுக்க 'ரோலர் கிராஸ் பேரியர்'
கம்பமெட்டு ரோட்டில் விபத்தை தடுக்க 'ரோலர் கிராஸ் பேரியர்'
கம்பமெட்டு ரோட்டில் விபத்தை தடுக்க 'ரோலர் கிராஸ் பேரியர்'
ADDED : அக் 27, 2024 04:52 AM
கம்பம் : கம்பமெட்டு மலை ரோட்டில் விபத்துகளை தவிர்க்க ரூ.2 கோடியில் 'ரோலர் கிராஸ் பேரியர்'தடுப்பு அமைக்கப்படுகிறது.
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 13 கி.மீ.,துாரத்தில் கேரளா செல்லும் கம்பமெட்டு மலைப்பாதை உள்ளது. இதில் 7 கி.மீ. மலைப் பாதை செங்குத்தான குறுகலான வளைவுகளை கொண்டது.
தினமும் ஏலத் தோட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் தொழிலாளர்களை ஏற்றி செல்கின்றனர். இருமாநில போக்குவரத்து அதிகம் நடைபெறும் ரோடாகும். அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்நிலையில் மேலிருந்து கீழ் வரும் வாகனங்கள் பக்கவாட்டில் பள்ளத்தில் சாய்ந்து விபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
இதை தவிர்க்க குறிப்பிட்ட 9 வது கொண்டை ஊசி வளைவிலிருந்து 11 வது கொண்டை ஊசி வளைவு வரை ரோலர் கிராஸ் பேரியர் என்ற தடுப்பு அமைக்கப்படுகிறது.
ரூ.2 கோடியில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் கம்பமெட்டு ரோட்டில் விபத்துகள் நடப்பது குறையும் என்கின்றனர்.