/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் காட்சிப் பொருளான கார்கள் வீணாகுது ரூ.5.70 கோடி
/
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் காட்சிப் பொருளான கார்கள் வீணாகுது ரூ.5.70 கோடி
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் காட்சிப் பொருளான கார்கள் வீணாகுது ரூ.5.70 கோடி
ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் காட்சிப் பொருளான கார்கள் வீணாகுது ரூ.5.70 கோடி
ADDED : ஜன 13, 2025 01:10 AM
தேனி: தமிழகத்தில் இலகு ரக வாகன டிரைவிங் லைசென்ஸ் தேர்விற்கு பயன்படுத்தும் வகையில் ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு ரூ.5.70 கோடி மதிப்பில் 145 கார்கள் வழங்கப்பட்டன. இவை பயன்படுத்தப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளதால் அரசு நிதி வீணாகிறது.
தமிழகத்தில் 91 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், 54 பிரிவு அலுவலகங்கள் என மொத்தம் 145 அலுவலகங்கள் செயல்படுகின்றன. டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு முன் ஆர்.டி.ஓ.,க்கள் முன்னிலையில் பொது மக்கள் வாகனங்களை இயக்கி காட்டும் தேர்வு நடக்கிறது. இதில் சரியாக செயல்பட்டால் மட்டுமே லைசென்ஸ் வழங்கப்படுகிறது. டூவீலர்கள் ஓட்டுவதற்கு சொந்த, உறவினர்களின் வாகனங்களில் கற்றுக் கொள்கின்றனர்.
இலகு ரக வாகனங்களான கார், மினிவேன் உள்ளிட்டவற்றை பிறர் வாகனங்கள், டிரைவிங் ஸ்கூல் மூலம் கற்றுக்கொள்கின்றனர். இலகு ரக வாகன லைசென்ஸ் பெற வருகை தருவோர் பயன்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு கார்கள் வழங்கப்பட்டன. இவற்றில் இருபுறமும் கிளட்ச், பிரேக், ஆக்சிலேட்டர் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கார்களை பயன்படுத்த ரூ.50 வசூலிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவற்றை மாதந்தோறும் 10 பேர் கூட பயன்படுத்துவது இல்லை.
ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்கள் கூறுகையில் 'லைசென்ஸ் பெற வரும் பலரும் டிரைவிங் ஸ்கூல் கார்கள், வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
இதனால் அரசு சார்பில் வழங்கப்பட்ட கார்கள் பயன்பாடு இன்றி கிடக்கின்றன. இவற்றை வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்' என்றனர்.