/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கூடுதல் ஒட்டுச் சாவடி பள்ளிகளில் ஆர்.டி.ஓ. ஆய்வு
/
கூடுதல் ஒட்டுச் சாவடி பள்ளிகளில் ஆர்.டி.ஓ. ஆய்வு
ADDED : மார் 10, 2024 04:32 AM
கம்பம், : தேனி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளில் அமைக்கப்பட உள்ள ஒட்டுச் சாவடிகளை ஆய்வு பண்ணும் பணிகள் துவங்கியது.
தேனி லோக்சபா தொகுதியில் கம்பம், போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, சோழவந்தான் உசிலம்பட்டி என ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள ஒட்டுச்சாவடிகளில் ஆய்வு பணி துவங்கியது.
கம்பம் மற்றும் போடி சட்டசபை தொகுதிகளில் உத்தமபாளையம் ஆர். டி.ஒ. தாட்சாயணி தலைமையில் ஆய்வு துவங்கியது. குறிப்பாக ஒரே வளாகத்தில் அதிக ஒட்டுச் சாவடிகள் உள்ள மையங்களை ஆய்வு செய்தனர். ஓட்டுச்சாவடிகளில் மின்சாரம், குடிநீர், கழிப்பறை, மாற்றுத் திறனாளிகள் செல்ல சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்தனர். நேற்று கம்பம் அரசு கள்ளர் பள்ளி, சி.பி.யூ. மேல் நிலைப்பள்ளி, ஆர்.சி. பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் நடந்த ஆய்வல் தாசில்தார் சுந்தர் லால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பெரியகுளம் பகுதியில் ஆர்.டி.ஒ. முத்துமாதவன் தலைமையில் ஆய்வு நடைபெறுகிறது.

