/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் ரோடு மறியல்
/
ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் ரோடு மறியல்
ADDED : ஆக 02, 2025 12:53 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், ரங்கசமுத்திரம் ஊராட்சி ஜம்புலிபுத்தூரில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் பணித்தள பொறுப்பாளர் நியமிக்க வலியுறுத்தி ரோடு மறியல் செய்தனர். ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று ஜம்பலிபுத்தூரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிகள் செய்வதற்காக வந்திருந்தனர்.
பணித்தள பொறுப்பாளர் விடுமுறையில் சென்றதால் வருகை பதிவேடு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. வருகை பதிவேடு இன்றி வேலை மேற்கொண்டால் சம்பள கணக்கில் வராது என்று தெரிவித்து பணித்தள பொறுப்பாளர் மூலம் வருகை பதிவேடு செய்ய வலியுறுத்தினர். தாமதம் ஏற்பட்டதால் வைகை அணை ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். ஆண்டிபட்டி பி.டி.ஓ., சரவணன், வைகை அணை எஸ்.ஐ.,மணிமுத்து ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

