/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டா நிலங்களில் மரம் வளர்க்க மரக்கன்றுகள் இலவசம்
/
பட்டா நிலங்களில் மரம் வளர்க்க மரக்கன்றுகள் இலவசம்
ADDED : ஜன 28, 2025 06:11 AM
போடி:' பட்டா நிலங்களில் மரங்கள் வளர்த்து சொந்த பயன் பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ள இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது என போடி வேளாண் உதவி இயக்குநர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.
போடி வட்டாரத்தில் மரங்கள் வளர்ப்பதற்கு தேவையான மரக்கன்றுகள் வேளாண்துறை மூலம் இலவச வழங்கப்படுகிறது.
ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களது பட்டா நிலங்களில் மகாகனி, தேக்கு, தோதகத்தி (ஈட்டி), மலை வேம்பு, செம்மரம் உள்ளிட்ட மரங்கள் வளர்ப்பதற்கு தேவையான மரக்கன்றுகள் 6250 வரை வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகபட்சமாக 100 மரக்கன்றுகள் வழங்கப்படும். மரக்கன்று பெற்ற விவசாயிகள் தங்களது நிலங்களில் நட்டு, நன்கு வளர்ந்து மரங்கள் ஆன பின்பு தங்களது சொந்த பயன்பாட்டிற்கு அல்லது வெளியே விற்பனை செய்வதற்கு வனத்துறை மூலம் கட்டிங் ஆர்டர் பெற்றுக் கொள்ளலாம்.
மரம் வளர்க்க விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கான சிட்டா, ஆதார் நகல், போட்டோ ஆகியவற்றுடன் போடி வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பித்து இலவசமரக்கன்றுகள் பெற்றுக் கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.