ADDED : டிச 08, 2024 06:15 AM
பள்ளியில் கண்காட்சி
தேனி: கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்க பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கான கணித கண்காட்சி நடந்தது. கண்காட்சியினை தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, பள்ளியின் செயலாளர் வாசு துவக்கி வைத்தனர். மாணவர்கள், பெற்றோர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கண்காட்சியை பள்ளி முதலவர் பாலபிரேமாதேவி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கல்லுாரியில் பயிற்சி பட்டறை
தேனி: வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியில் வணிகவியல், இன்னோவேஷன் கவுன்சில் சார்பில் சந்தைப்படுத்துதலில் ஏ.ஐ., கருவிகள் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பெங்களூரு புனித கிளாரெட் கல்லுாரி ஆராய்ச்சி மைய தேர்வுக்கட்டுப்பாடடாளர் சிவமுருகன் ஏ.ஐ., தொழில்நுட்பம் பொருத்திய கருவிகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.