ADDED : ஜன 03, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி; ஆண்டிப்பட்டி எஸ்.கே.ஏ., மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் ஜம்புலிப்புத்தூரில் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. பள்ளி தாளாளர் வஜ்ரவேல் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல், என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பாளர் நேருராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முகாமில் பங்கேற்ற 60 மாணவர்கள் ஜம்புலிப்புத்தூர் கிராமத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர். வாசிமலையான் கோயில் பகுதியில் மாணவர்களுக்கு மலைேயற்ற பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் வேல்முருகன், பாண்டீஸ்வரன், தம்பித்துரை ஆகியோர் செய்திருந்தனர்.