ADDED : டிச 07, 2024 08:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா பள்ளி தலைவர் ராஜகோபால் தலைமையில் நடந்தது.
முதல்வர் உமா மகேஸ்வரி, நிர்வாகக்குழு உறுப்பினர் முகமது அப்துல் காதர், பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில் தியாகராஜன்.
அழகுகுமார். மாரிமுத்து, சரவணன், காளிமுத்து, வடமலு , பழனியாண்டி, தலைமையாசிரியர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
போடி நகராட்சி கமிஷனர் பார்கவி தேசிய கொடியை ஏற்றினார். பள்ளி துணை முதல்வர் சித்ராதேவி, உடற்கல்வி ஆசிரியர் நந்தகுமார் வரவேற்றனர். 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.