/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ்சில் இருந்து வேகத்தடையில் விழுந்த பள்ளி மாணவர் காயம்
/
பஸ்சில் இருந்து வேகத்தடையில் விழுந்த பள்ளி மாணவர் காயம்
பஸ்சில் இருந்து வேகத்தடையில் விழுந்த பள்ளி மாணவர் காயம்
பஸ்சில் இருந்து வேகத்தடையில் விழுந்த பள்ளி மாணவர் காயம்
ADDED : செப் 26, 2024 05:39 AM
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே அரசு டவுன் பஸ்சில் இருந்து கீழே விழுந்ததில் மாணவர் அஜ்மீர்காஜா காயமடைந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரியகுளம் அருகே குள்ளப்புரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் அஜ்மீர்காஜா 17. இவர் வைகை அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். பெரியகுளத்தில் இருந்து குள்ளப்புரம் வழியாக ஆண்டிபட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சில் (டி.என்.57,1837) குள்ளப்புரத்தில், வைகை அணைக்கு செல்ல ஏறினார்.
பஸ்சின் பின்பக்கம் படிக்கட்டில் நின்று கொண்டு பயணித்தார். தனியார் சர்க்கரை ஆலை
அருகே வேகத்தடையில் பஸ் ஏறி, இறங்கும் போது நிலை தடுமாறி அஜ்மீர் காஜா கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஜெயமங்கலம் எஸ்.ஐ.,
ஜான்செல்லத்துரை அரசு பஸ் கண்டக்டர் தங்கப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்தனர்.-