ADDED : மார் 17, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பொம்மையகவுன்டன்பட்டியில் செயல்பட்டு வரும் விதை பரிசோதனை மையத்தில் வேளாண் கல்லுாரி மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது.
சான்று விதை மாதிரிகள், ஆய்வாளர் விதை மாதிரிகள், விதை பரிசோதனை நிலையங்களின் பங்கு, பராமரிக்கப்படும் பதிவேடுகள், ஸ்பெக்ஸ் மென்பொருள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண் அலுவலர்கள் சத்யா, மகிஷா தேவி பயிற்சி அளித்தனர்.

