/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளையாட்டு விடுதிகளுக்கு கபடிவீரர்கள் தேர்வு துவங்கியது
/
விளையாட்டு விடுதிகளுக்கு கபடிவீரர்கள் தேர்வு துவங்கியது
விளையாட்டு விடுதிகளுக்கு கபடிவீரர்கள் தேர்வு துவங்கியது
விளையாட்டு விடுதிகளுக்கு கபடிவீரர்கள் தேர்வு துவங்கியது
ADDED : மே 20, 2025 01:32 AM

தேனி: தமிழகத்தில் மாவட்ட விளையாட்டு அரங்குகளில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் சில விளையாட்டுகளுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
தேனி, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கபடி வீரர்களுக்கு விடுதிகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த விடுதிகளுக்கான மாநில அளவிலான மாணவர்கள் தேர்வு தேனியில் நேற்று துவங்கியது.
இதில் 7 ம் வகுப்பு மாணவர்கள் 31 பேர், 8ம் வகுப்பு மாணவர்கள் 74 பேர் பங்கேற்றனர்.
இவர்கள் மாவட்ட அளவில் தேர்வு செய்ப்பட்டவர்கள் ஆவர்.
வீரர்கள் தேர்வினை மதுரை மாவட்ட விளையாட்டு விடுதி அலுவலர் முருகன், சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் கண்காணித்தனர். வீரர்கள் தேர்வு மே 23 வரை நடக்கிறது.