/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டிபட்டி பகுதியில் கால்நடைகளின் தீவன தேவை தன்னிறைவு! குளங்களில் தேங்கிய நீர் கோடையில் சமாளிக்க உதவும்
/
ஆண்டிபட்டி பகுதியில் கால்நடைகளின் தீவன தேவை தன்னிறைவு! குளங்களில் தேங்கிய நீர் கோடையில் சமாளிக்க உதவும்
ஆண்டிபட்டி பகுதியில் கால்நடைகளின் தீவன தேவை தன்னிறைவு! குளங்களில் தேங்கிய நீர் கோடையில் சமாளிக்க உதவும்
ஆண்டிபட்டி பகுதியில் கால்நடைகளின் தீவன தேவை தன்னிறைவு! குளங்களில் தேங்கிய நீர் கோடையில் சமாளிக்க உதவும்
ADDED : ஜன 18, 2024 06:06 AM
ஆண்டிபட்டி தாலுகாவில் 200க்கும் கிராமங்கள் விவசாயம்,கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக கொண்டுள்ளன. நடப்பு பருவத்தில் மழையை நம்பி விதைப்பு செய்த மானாவாரி நிலங்களில் தற்போது அறுவடை பணி துவங்கியுள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கர் இறவை பாசன நிலங்களிலும் நெல், வாழை, காய்கறிகள் சாகுபடி தொடர்கிறது.
ஆண்டிபட்டி தாலுகாவில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு முக்கிய இடம் பிடித்துள்ளது. கால்நடை வளர்ப்பில் லட்சத்திற்கு அதிகமான கறவை மாடுகள், நாட்டு மாடுகள் பல லட்சம் எண்ணிக்கையிலான செம்மறி, வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன. கறவை மாடுகளை மட்டும் கொட்டத்தில் கட்டி வைத்து தீவனம் கொடுத்து பராமரிக்கின்றனர். நாட்டு மாடுகள், ஆடுகள் அன்றாடம் மேய்ச்சலுக்காக ஓட்டிச்செல்லப்படுகின்றன.
வறட்சியான காலங்களில் மேய்ச்சல் நிலங்கள் காய்ந்ததால் பல கி.மீ., தூரம் கால்நடைகளை ஓட்டிச்சென்றனர். தற்போது ஆங்காங்கு உள்ள விவசாயம் இல்லாத தரிசு நிலங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்துள்ள மேய்ச்சல் நிலங்கள், நீர் வரத்து ஓடைகள், நீர்த்தேக்கங்களில் தன் போக்கில் வளர்ந்து கிடக்கும் செடி, கொடிகள், புல், பூண்டுகள் மேச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கான தீவன தேவையை பூர்த்தி செய்கின்றன.
நீர் நிலைகளில் தேங்கிய நீரும் வரும் கோடையில் கால்நடைகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பதால் கால்நடை வளர்ப்போருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: மானாவாரி நிலங்களில் அறுவடைக்குப்பின் கிடைக்கும் தட்டைகள், தழைகளை இருப்பில் வைத்து கறவை மாடுகளின் தீவனத்திற்கு பயன்படுத்த முடியும். வைகை ஆற்றின் கரையோர பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மேய்ச்சல் நிலங்கள், குளங்கள், கண்மாய்கள் சார்ந்துள்ள இடங்களில் தற்போது வளர்ந்துள்ள தீவனம் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு கோடை காலம் வரை போதுமானதாக இருக்கும்.
கால்நடைகளுக்கான தீவனச் செலவு இந்த ஆண்டு பெருமளவு குறைந்துள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. கால்நடை வளர்ப்பை உப தொழிலாக கொண்டுள்ள விவசாயிகளுக்கு தற்போதுள்ள சூழல் மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்றனர்.