ADDED : ஏப் 26, 2025 05:30 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச தொழில் நுட்ப ஆராய்ச்சி கருத்தரங்கு கல்லூரி குழுமத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா, சுதா முன்னிலை வகித்தனர். எத்தியோப்பியா பகிர்தார் பல்கலை பேராசிரியர் முனைவர் பேர்கிட் கெயிலி, அண்ணா பல்கலை திண்டுக்கல் உறுப்புக் கல்லூரி பேராசிரியர் முனைவர் பிரேம் ஆனந்த் பங்கேற்றனர். கருத்தரங்கில் தமிழகம் உள்பட வெளி மாநிலங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்து மெக்கானிக்கல், சிவில், மின் அணுவியல் தொடர்புத்துறை, மின்னியல் மற்றும் மின் அணுவியல் தொடர்பு துறை, மேலாண்மை துறை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் 940 பேர் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த கட்டுரைகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்கு பரிசு பாராட்டு சான்றுகளை கல்லூரி முதல்வர் முனைவர் அருள்குமார் வழங்கினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முனைவர் பவுன்ராஜ், முனைவர் விவேக் ஆகியோர் செய்திருந்தனர்.