ADDED : ஜூலை 10, 2025 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் வணிகவியல், வங்கியியல், தொழில்முறை கணக்கியல் துறை சார்பில் வணிகவியல், கணக்குபதிவியலில் ஏ.ஐ., தொழில்நுட்பம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் தலைமை வகித்தார். மதுரை அமெரிக்கன் கல்லுாரி வணிகவியல் துறை பேராசிரியை எமிமோல் கிரேஸ், கணக்கியல், வணிகவியல் துறையில் ஏ.ஐ., பயன்பாடு பற்றி பேசினார். வணிகவியல் துறை தலைவர் மைதிலி, பேராசிரியர் கண்ணன் பேசினர். துறை பேராசிரியர்கள் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.