ADDED : ஜூலை 17, 2025 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: மத்திய அரசின் தொழில் திறன் திட்டங்கள் பயிற்சி பட்டறையில் ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்றேனர்.
பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லுாரி, மத்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை எனது இளைய பாரதம் இணைந்து, முதன்மை திட்டங்கள் பயிற்சி பட்டறை நடந்தது.
மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் இருதய கலைச்செல்வம் முன்னிலை வகித்தார்.
ஒருங்கிணைப்பாளர் கோகுல் கிருஷ்ணா வரவேற்றார்.
கனரா வங்கி சுயதொழில் பயிற்சியாளர் மோகன்ராஜ், மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குனர் பாஸ்கரன், ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர். மத்திய அரசின் தொழில் திறன் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. பேராசிரியை ஜக்சபா நன்றிகூறினார்.-