ADDED : ஜன 22, 2024 05:51 AM
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில், 'டிஜிட்டல் வர்த்தகம் ஒரு முன்னுதாரண மாற்றம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்விற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்றார். உறவின்முறை துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரிச் செயலாளர் காசிபிரபு, கல்லுாரி இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் கோமதி, சுசீலா, சரண்யா, உமா ஆகியோர் பேசினர்.
மதுரை அமெரிக்கன் கல்லுாரி இணைப் பேராசிரியர் ஜஸ்டின் மனோகர், 'டிஜிட்டல் வர்த்தகம், வணிகம், தரவுகளை சேகரித்தல்' என்பன உள்ளிட்ட தலைப்புகளில் பேசினார். துறை உதவிப்பேராசிரியர் பிரதிபா நன்றி தெரிவித்தார்.