நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியின் கணினி அறிவியல் - தகவல் தொழில் நுட்பத்துறை, கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் மாநில கருத்தரங்கு நடந்தது. மாணவி தீபிகா வரவேற்றார்.
முதல்வர் வெற்றிவேல் தலைமை வகித்தார். தனியார் நிறுவன மேலாளர் சத்யமூர்த்தி பழனிசாமி, இன்றைய உலகில் இயந்திரக் கற்றலில்புதிய யுக்திகள், அதன் மூலம் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள்' என்ற தலைப்பில் பேசினார். மாணவர் வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாணவி ஜனனிஸ்ரீ நன்றி தெரிவித்தார்.