UPDATED : அக் 09, 2026 10:01 PM
ADDED : அக் 09, 2026 07:36 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். கல்லுாரி பொருளாளர் வாசுதேவன், கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலை தமிழ்துறை இணைப்பேராசிரியர் சிதம்பரம், பயண இலக்கியங்களின் நோக்கம், அவற்றின் வரலாற்றுப்போக்கு என்ற தலைப்பில் பேசினார். கல்லுாரி தமிழ்துறை தலைவர் ரதிதேவி தலைமையில் பேராசிரியர்கள் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.
