UPDATED : அக் 31, 2026 07:26 PM
ADDED : அக் 31, 2026 07:24 PM
போடி: போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் என்.எஸ்.எஸ்., மற்றும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள், தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். சமூக நலத்துறை அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ், பிரபாகரன், வசந்தி, ஏ.எச்.எம். டிரஸ்ட் அலுவலர் பொன்னுத்தாய் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஹேமா வரவேற்றார். ஏ.எச்.எம்.டிரஸ்ட் சேர்ந்த மூத்த குடி மக்களுடன் இணைந்து என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம், பரமபதம், கிட்டி, பம்பரம் போன்ற விளையாட்டுகள் விளையாடினர். வெற்றி பெற்ற மூத்த குடிமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற என்.எஸ். எஸ்., மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
