/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போலீஸ் ஸ்டேஷன்களில் கடை அமைத்து பட்டாசு விற்பனை
/
போலீஸ் ஸ்டேஷன்களில் கடை அமைத்து பட்டாசு விற்பனை
ADDED : அக் 29, 2024 05:40 AM
கம்பம்: தேனி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களிலும் பட்டாசு கடை திறந்து விற்பனை துவக்கி உள்ளனர்.
தேனி எஸ். பி. சிவபிரசாத் உத்தரவில் ஆயுதப்படை போலீஸ் பிரிவு சார்பில், பெரியகுளம், சின்னமனூர், ஆண்டிபட்டி அனைத்து மகளிர் ஸ்டேஷன்கள், மற்றும் தேனி ஆயுதப்படையில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு குறைந்த விலையில் பொதுமக்கள் பட்டாசு வாங்கி கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆயுத படை பிரிவில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்று வந்தது. இதனை போலீசார் மட்டும் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்தாண்டு எஸ்.பி. உத்தரவில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் பட்டாசு விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வெளி மார்கெட் விலையை விட இங்கு விலை குறைவாக கிடைக்கும் என்றார்.

