/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாக்கடை கட்டுமான பணியால் கழிவுநீரை நெடுஞ்சாலையில் ஓடும் அவலம்
/
சாக்கடை கட்டுமான பணியால் கழிவுநீரை நெடுஞ்சாலையில் ஓடும் அவலம்
சாக்கடை கட்டுமான பணியால் கழிவுநீரை நெடுஞ்சாலையில் ஓடும் அவலம்
சாக்கடை கட்டுமான பணியால் கழிவுநீரை நெடுஞ்சாலையில் ஓடும் அவலம்
ADDED : ஜூலை 05, 2025 12:21 AM

கம்பம்; காமயகவுண்டன்பட்டி மெயின்ரோட்டில் சாக்கடை கட்டும் பணிகளுக்காக, கழிவு நீரை சுருளி அருவி நெடுஞ்சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர்.
காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி மெயின்ரோட்டில் சாக்கடை கட்டும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது. இந்த மெயின்ரோடு உத்தமபாளையம், சுருளி அருவி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கட்டுமான பணிகள் நடப்பதால் சாக்கடை கழிவு நீரை நெடுஞ்சாலையில் திருப்பி விட்டுள்ளனர்.இதனால் சுருளி அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கழிவு நீரால்சிரமம் அடைகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளவில்லை.
இது தொடர்பாக செயல் அலுவலர் பஷீர் கூறுகையில், நாங்கள் என்ன செய்ய முடியும், நெடுஞ்சாலையில் தான் விட வேண்டியுள்ளது, என்றார். நெடுஞ்சாலையை கழிவு நீர் ஓடையாக மாற்றி வருவதால் ரோடும் சேதமடைவதை நெடுஞ்சாலைத் துறையும் கண்டு கொள்ளாமல் உள்ளது.