நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதன் துவக்க விழா நேற்று நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் வாசுதேவன் தலைமையில் உறுதிமொழி எடுத்தனர். தூய்மை குறித்து கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.
பொது இடங்களில் குப்பை கொட்டாமல் நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது பற்றியும், தூய்மைப் பணியாளர்களிடம் மக்கும் மக்காத குப்பையை தரம் பிரித்துக் கொடுப்பது பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மக்கள் பங்களிப்புடன் பொது இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளுதல், மனித சங்கிலி பேரணி ஆகியவை இன்று துவங்க உள்ளன.