/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற சிலம்பப் போட்டி
/
பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற சிலம்பப் போட்டி
ADDED : மார் 31, 2025 07:18 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் 15 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான சிலம்பப் போட்டி பகவதி அம்மன் கோயில் திடலில் நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா, சக்கம்பட்டி பகவதி அம்மன், மதுர காளியம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த போட்டிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 5 முதல் 15 வயதிற்கு உட்பட்ட 250 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, தொடு முறை பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. துவக்க விழா நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமை வகித்தார்.
விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்டத் துணை அமைப்பாளர் சேதுராஜா துவக்கி வைத்தார். தி.மு.க., ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ராஜாராம், நகரச் செயலாளர் சரவணன், தி.மு.க., நகரத் தலைவர் சேட்டுபரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை சிங்கக்குட்டி சிலம்பம் அகாடமி மாஸ்டர் குமார் செய்திருந்தார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.