/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆறு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம்
/
ஆறு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம்
ADDED : ஜூன் 03, 2025 12:53 AM
தேனி: மாவட்டத்திற்கு வட்டாரம் வாரியாக 6 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இரு தினங்களுக்கு முன் உணவுப் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் அலுவலர்கள் 139 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தேனி மாவட்டத்தில் பணியில் இருந்த 4 அலுவலர்கள் மதுரை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதே போல் வெவ்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்த உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் தேனி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக தேனி லிங்கம், ஆண்டிபட்டி இளங்கோ, பெரியகுளம் கண்ணன், உத்தமபாளையம் ரமேஷ், சின்னமனுார் சிரஞ்சீவி, போடிக்கு செந்தில்ராஜ்குமார் என 6 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.