/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மது குடிக்க பணம் தராதவர் மண்டை உடைப்பு
/
மது குடிக்க பணம் தராதவர் மண்டை உடைப்பு
ADDED : ஜூலை 09, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர் : சின்னமனூர் அருகே உள்ள அப்பி பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் 33, இவர் தெருவில் சைக்கிளில் செல்லும்போது, இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் சரவணக்குமார் 30, என்பவர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
பணம் தர மறுத்த மகேந்திரனை , கீழே கிடந்த கல்லால் மண்டையில் அடித்து உடைத்துள்ளார். காயம்பட்ட மகேந்திரன் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓடைப்பட்டி போலீசார் சரவணக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.