/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய நெடுஞ்சாலையில் மண் அகற்றும் பணி துவங்கியது
/
தேசிய நெடுஞ்சாலையில் மண் அகற்றும் பணி துவங்கியது
ADDED : ஜூலை 08, 2025 01:55 AM

மூணாறு: தேவிகுளத்தில் இறைச்சல்பாறை பகுதியில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மண்ணை அகற்றும் பணி துவங்கியது.
மூணாறு அருகே தேவிகுளத்தில் இறைச்சல்பாறையில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி பகுதியில் 2024 ஜூலை 30ல் மண் சரிவு ஏற்பட்டதுடன் மலை மீது நீண்ட விரிசல் ஏற்பட்டது.
அதனால் அப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
விரிசல் ஏற்பட்ட பகுதியின் கீழ் குடியிருப்புகள் ஏராளம் உள்ளன. கடந்த ஆகஸ்ட்டில் பெய்த பலத்த மழையின்போது, அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு 23 குடும்பங்களுக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் அளித்தனர்.
அது போன்று ஆபத்தான பகுதி என்ற போதும் மழைக்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெய்து வரும் மழையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மண் சேறும், சகதியுமாக ரோட்டில் பரவி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதுடன் விபத்து அபாயமும் ஏற்பட்டது.
அதனால் தேசிய நெடுஞ்சாலைதுறையினர் மண்ணை அகற்றும் பணியை துவக்கினர்.
அப்பகுதியில் ரோட்டில் பரவிய சேறு, சகதி ஆகியவற்றை மூணாறு தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சியடித்து சுத்தம் செய்தனர்.