ADDED : ஜன 26, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் காட்நைனார் 68. துபாயில் 38 ஆண்டுகளாக பணிபுரிந்து தற்போது பெரியகுளம் வந்துள்ளார். தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கும் இவரது மகன் சையது யூசுப் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.
வேறு பகுதியில் வசிக்கும் சையதுயூசுப், காட்நைனார் வீட்டின் பூட்டு மற்றும் வீட்டினுள் 4 கேமிராக்களை உடைத்து, படுக்கையறையில் வாட்ச், ஏ.டி.எம்., கார்டை திருடியதாவும், சையது யூசுப்பிற்கு உடந்தையாக இவரது அம்மா தவுலத்பேகம். மனைவி பாசிலாபானு, மாமியார் ஜைனபுபேகம், மைத்துனர் கமர்தீன் ஆகிய 5 பேர் மீதும், காட்நைனார் புகாரில் வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.