/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளபோலீசார் தயாராக இருக்க அறிவுறுத்தல் எஸ்.பி., சிவபிரசாத் தகவல்

ADDED : அக் 16, 2024 04:00 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் தேசிய பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 138 போலீஸ்காரர்களுடன் லோக்கல் போலீசாரும் இணைந்து மீட்புப் பணி செய்ய தயார் நிலையில் உள்ளனர்.' என எஸ்.பி.,சிவபிரசாத் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. மாவட்டத்தில் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு, மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேனி எஸ்.பி., உத்தரவில் மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு, மூல வைகை ஆற்றுப் பகுதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட நீர்வழித் தட பகுதிகளில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் விபத்து மற்றும் பேரிடர்களில் சிக்கினால் அவர்களை காப்பாற்ற தயார் நிலையில் இருக்க எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது: மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் தவிர்த்து அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் தேசிய பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 138 போலீசாருடன், லோக்கல் போலீசாரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் நீர்வழித்தட கிராமங்களில் தண்டோரா, மைக் மூலம் மக்களை எச்சரிப்பதும், ஆற்று நீரில் சிக்குபவர்களை காப்பாற்ற லைப் ஜாக்கெட், மரங்களை வெட்ட உதவும் கட்டிங் மெஷின், நைலான் கயிறு, டயர், பிளாஸ்டிக் பாட்டில்களால் ஆன மீட்பு கருவி, மீட்புப் பணிக்கான ஷூ உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மீட்புக் கருவிகள் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.